இவர் வழிகேடெனும் விஷத்தை சற்று அதிகமாகவே அருந்தி விட்டார். அந்த வழிகேட்டையே அவருடைய ரத்த நரம்புகளில் ஓட விட்டுவிட்டார்.
சஊதி அரேபியாவுக்கான எனது பயணமொன்றில் அங்கு நான் சந்தித்த அறிஞர்களிடம் P. ஜெய்னுல் ஆபிதீனுடைய வழிகேடான போக்குகள் பற்றிக் கூறிய வேளை
"அந்த அறிஞர்கள் என்னை நோக்கி கூறினார்கள்: நீங்கள் இந்த மனிதனின் நடவடிக்கைகளை வழிகேடென்று சொல்வது இஸ்லாத்திற்குச் செய்கின்ற அநியாயமாகும்.
ஏனென்றால் P. ஜெய்னுல் ஆபிதீன் என்ற இந்த மனிதனின் போக்கைக் கவனிக்கையில் அவரிடம் குப்ர் இருப்பது தெரிகிறது. அவரது செயல்களை வழிகேடென்று சொல்வதை விட குப்ர் என்று சொலவதுதான் சரியானது என்று அந்த அறிஞர்கள் என்னிடம் கூறினார்கள்."
இருப்பினும் என்னைப் பொருத்தவரை இந்த மனிதனுடைய விடயத்தை கல்வியில் சிறந்த உலமாக்களிடம் நான் விட்டுவிட்டேன். அவர்களே இவரைப் பற்றி இந்த உம்மத்திற்குத் தீர்ப்பு வழங்கட்டும். இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய உலகம் அதனை அறிந்து கொள்ளும்.
அறபு உலமாக்கள் P. ஜெய்னுல் ஆபிதீன் விடயத்தில் ஆச்சரியம் கொள்ளும் அம்சம் என்னவென்றால் அறபி தெரியாத இந்த மனிதர் எப்படி இந்த முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்ட முன்வந்தார். இந்த சமூகம் எப்படி இவரை தங்களுக்கு வழிகாட்டும் தலைவராக எடுத்தது? என்று பல அறபி உலமாக்கள் வியப்புடன் கேள்வி கேட்கின்றனர்.
அறபி மொழி சரியாக பேச தெரியாதது மட்டுமின்றி அறபி உலமாக்களோடு எந்தவிதத் தொடர்போ அறிமுகமோ இல்லாத ஒரு மனிதரிடமிருந்து பெரும் சமூகமொன்று எப்படி இஸ்லாமிக் கல்வியைப் பெற்றுக்கொள்கிறது என்ற உலமாக்களின் கேள்விக்கு நான் பதிலாகக் கூறியது என்னவென்றால்…
எமது சமூகத்தைப் பொருத்தவரை உலமாக்களால் சிபாரிசு செய்யப்பட்ட அவ்வுலமாக்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவரிடம்தான் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்தவித அவசியமுமில்லை. மேலும் எமது சமூகத்தில் அறபி மொழியைக் கற்றவர்தான் இஸ்லாமிய கல்வியைப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்கின்ற அவசியமுமில்லை.
எமது சமூகத்தில் ஒருவர் தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பெயரையும் வளர்த்துக் கொண்டாரென்றால் அவர் மக்களிடத்தில் ஒரு ஆலிமாகி விடுவார். இதுதான் எமது சமூகத்திலுள்ள மக்கள் தெரிந்து வைத்திருக்கும் ஆலிம் என்பதற்கான வரைவிலக்கணம். இவ்வாறு நான் அந்த அறிஞர்களிடம் எமது சமூகத்தைப் பற்றி விளக்கினேன்.
சமூகத்திலுள்ள மக்களின் இந்த வரைவிலக்கணம் எமது இமாம்கள் (அஇம்மதுல் முஸ்லிமீன்) காட்டித் தந்த வரைவிலக்கணமல்ல. எனவே பொது மக்களின் இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில் ஆலிமானவர்களில் ஒருவராகத்தான் P. ஜெய்னுல்; ஆபிதீன் என்பவரும் இருக்கிறார்.
இவர் கூட்டத்தை உருவாக்கினார். பெயரை வளர்த்துக் கொண்டார். எனவே உம்மத்துக்கு வழிகாட்டும் ஆலிமாக மாறி விட்டார். இதனால் எந்த உலமாக்கள் இவரை ஒரு ஆலிமென்று சமூகத்துக்கு அடையாளம் காட்டினார்களென்பதோ இவர் எந்த உலமாக்களிடம் அமர்ந்து கல்வியைப் பெற்றுக் கொண்டாரென்பதோ மக்களுக்கு தேவையற்றதொரு விடயமாக மாறி விட்டது. அதன் அவசியத்தை எவரும் பொருட்படுத்தவில்லை.

No comments:
Post a Comment